வெளிநாட்டு வாழ் இலங்கையர்களுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அநுர
இலங்கைக்கு அந்நியச் செலாவணியைக் கொண்டு வரும் வெளிநாட்டு வாழ் இலங்கையர்களுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தனது நன்றியைத் தெரிவித்தார்.
மேலும் அவர்களுக்காக ஓய்வூதிய சம்பளத்தை வழங்க எதிர்பார்ப்பதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
நியூயார்க்கில் வசிக்கும் இலங்கை சமூகத்தினரிடம் உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முதலீட்டாளர்கள் நாட்டிற்கு அழைக்கப்படுகிறார்கள். அரசியல்வாதிகள் இதற்கு எந்த தரகு கோருவதில்லை என ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக வெளிநாட்டினரை விட தாய்நாட்டிற்கு வருகை தருமாறு இலங்கை சமூகத்தினருக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அதன் விளைவுக்கான குறிப்பிட்ட காலக்கெடுவை கூற முடியாது என்றும் கூறினார்.





