ஐ.நா சபையின் 80வது பொதுச் சபை அமர்விற்காக அமெரிக்கா புறப்பட்ட ஜனாதிபதி அனுரகுமார

ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அமெரிக்காவிற்கு புறப்பட்டுள்ளார்.
இரவு 10:20 மணியளவில் துபாய் செல்லும் விமானத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க புறப்பட்டுள்ளார். இணைப்பு விமானத்தில் நியூயார்க் நகரத்திற்குச் செல்ல உள்ளார்.
வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா ஊக்குவிப்பு அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் பல அரசு அதிகாரிகள் ஜனாதிபதியுடன் சென்றுள்ளனர்.
இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி திசாநாயக்க ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் (UNGA) கலந்து கொள்வார்.
ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின்படி, புதன்கிழமை (24) பிற்பகல் 3:15 மணி அளவில் ஐ.நா பொதுச் சபையில் உரையாற்ற உள்ளார்.
இப்பயணத்தின் போது அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை சமூக உறுப்பினர்களுடனான சந்திப்பிலும் ஜனாதிபதி கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.