பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த பிரித்தானியா – பிரான்ஸின் முடிவு விரைவில்

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பாலஸ்தீனத்தை தனி நாடாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா, கனடா மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளும் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளன.
மேலும் எதிர்காலத்தில் பிரான்சும் இதை அறிவிக்கும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாலஸ்தீனியர்கள் மற்றும் இஸ்ரேலியர்களுக்கு அமைதி மற்றும் இரு நாடுகள் தீர்வுக்கான நம்பிக்கையை மீட்டெடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய பிரதமர் கூறியுள்ளார்.
எனினும், இது பிரித்தானிய ஆஸ்திரேலியா, கனடா மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகள் பயங்கரவாதத்திற்கு அளித்த பரிசு என்று இஸ்ரேல் பிரதமர் கூறினார்.
அதன்படி, பாலஸ்தீனம் ஒரு நாடு அல்ல என்றும் ஜோர்டான் நதிக்கு மேற்கே பாலஸ்தீன நாடு இல்லை என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடியேற்றங்களை விரிவுபடுத்தும் திட்டம் தொடரும் என்றும் இஸ்ரேல் பிரதமர் வலியுறுத்தினார்.
இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் கிதியோன் சார் கூறுகையில், இஸ்ரேலின் எதிர்காலத்தை பிரிட்டன் அல்லது பிரான்ஸால் தீர்மானிக்க முடியாது.