இந்தியா – பாகிஸ்தான் உறவிற்கு சாத்தியமில்லை – பாகிஸ்தான் பிரதமர் அதிரடி அறிவிப்பு

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான இயல்பான உறவு சாத்தியமில்லை என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் பிரச்னையைத் தீர்க்காமல் இயல்பான உறவு சாத்தியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
லண்டனில் பாகிஸ்தான் வம்சாவளியினரிடையே பேசிய அவர், இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
காஷ்மீர் விவகாரத்தில் அமைதிக்கான முயற்சிகளை மேற்கொள்வது இந்தியாவின் பொறுப்பு என குறிப்பிட்டார்.
இந்தியாவும் பாகிஸ்தானும் நட்புறவுடன் இருப்பதற்குப் பதிலாக பகை நாடுகள் போல் சண்டை போட்டுக்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அமைதியாக இருப்பது அல்லது தொடர்ந்து போராடுவது என்பது இருநாடுகளின் கையில்தான் உள்ளது என் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி மதித்து வாழ வேண்டும் என்பதே பாகிஸ்தானின் விருப்பம் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வலியுறுத்தினார்.