பிரான்ஸில் பெண்களை பாதுகாக்க தீவிர முயற்சி
பிரான்ஸில் பெண்களுக்காக சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் Gérald Darmanin அறிவித்துள்ளார்.
பொது இடங்களுக்கு வரும் பெண்கள் மீது பாலியல் தாக்குதல்கள் இடம்பெறாமல் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் இவ்வருடத்தின் கோடை காலம் முழுவதும் இந்த சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரவு நேரங்களில் பொது இடங்கள் நேரத்தை செலவிடும் பெண்கள் அதிகளவில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர்.
அதுபோன்ற சம்பவங்களின் போது சிறப்பு கண்காணிப்பில் ஈடுபடும் அதிகாரிகள் உடனடி நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் பத்தில் 8 பெண்கள் இரவில் வெளியில் செல்ல பயப்பிடுகிறார்கள் என ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. அதேவேளை, 2020 ஆம் ஆண்டில் 220,000 பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.