நேபாளத்தை போல் ஊழலுக்கு எதிராக களமிறங்கிய பிலிப்பைன்ஸ் மக்கள்!

பிலிப்பைன்ஸில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
அண்மையில் அங்கு வெள்ளம் ஏற்றபட்ட நிலையில் வெள்ளக் கட்டுப்பாட்டுத் திட்டங்களிலிருந்து பெரும் ஊழல் மோசடி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் வணிகர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்படி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்தில் வன்முறை மற்றும் கலவரங்கள் வெடிக்கலாம் என கிடைக்கப் பெற்ற தகவலை தொடர்ந்து பொலிஸார் தயார் நிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வரலாற்று சிறப்புமிக்க மணிலா பூங்காவிலும், பிரதான EDSA நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஜனநாயக நினைவுச்சின்னத்திற்கு அருகிலும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய தூதரகங்கள் தங்கள் குடிமக்களை போராட்டங்களில் இருந்து விலகி இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் மார்கோஸ் பதவியேற்றதில் இருந்து 545 பில்லியன் பெசோ மதிப்புள்ள வெள்ளக்கட்டுப்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதில் பல்வேறு முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.