இலங்கையில் கடன் அட்டை மூலம் பொருட்களை கொள்வனவு செய்வோருக்கு முக்கிய அறிவிப்பு!

Debit and Credit card மூலம் பணம் செலுத்துவதில் விதிக்கப்படும் கூடுதல் கட்டணங்களை இரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி (CBSL) மற்றும் உள்நாட்டு வருவாய் துறை (IRD) ஆகியவற்றுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதை தொடர்ந்து மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பரிவர்த்தனைகளுக்கு கார்டுகளைப் பயன்படுத்தும் போது நுகர்வோர் தற்போது சந்திக்கும் இழப்புகளை ஈடுசெய்வதற்கான வழிமுறைகளை ஆராய்வது குறித்தும் அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளனர்.
எதிர்காலத்தில் அனைத்து பரிவர்த்தனைகளும் படிப்படியாக QR குறியீடு அடிப்படையிலான மொபைல் கட்டணங்களுக்கு மாறும் என்றும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
(Visited 7 times, 1 visits today)