இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை – கடும் கண்டனம் தெரிவித்த ஈரான்!

இஸ்ரேலுக்கு மற்ற நாடுகளை ஆக்கிரமிக்க உரிமை இல்லை என்று ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஸ்கோவ் கூறியுள்ளார்.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காசாவை ஆக்கிரமிக்க தீவிரமான தரைவழி தாக்குதல்களை தொடங்கியுள்ளார்.
அங்கிருந்து மக்கள் வெளியேற 48 மணிநேரம் கால அவகாசத்தை முன்னதாக வழங்கியிருந்தார். இருப்பினும் அங்கிருக்கும் மக்கள் ஒருமுறை வெளியேறினால் மீண்டும் அங்கு வர முடியாது என்ற அச்சத்தில் அங்கேயே இருக்க விருப்புதாக தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஸ்கோவ் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கு மற்ற நாடுகளை ஆக்கிரமிக்க உரிமை இல்லை என்றுக் கூறிய அவர், இஸ்ரேலுக்கு அமெரிக்கா அளிக்கும் ஆதரவையும் விமர்சித்துள்ளார்.
அத்துடன் இஸ்ரேலின் சட்டவிரோத, அநீதியான மற்றும் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகள் குறித்து மற்ற நாடுகள் அமைதியாக இருக்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.