அமெரிக்காவில் தான் பெற்ற குழந்தையை பார்த்து ஆச்சரியமடைந்த தாய்

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் St. Joseph’s மருத்துவமனையில் சுமார் 6 கிலோ கிராம் எடைகொண்ட குழந்தை பிறந்துள்ளது.
குழந்தையைப் பெற்ற டேனியலா ஹைன்ஸ் அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை என தெரிவித்துள்ளார்.
“இவ்வளவு பெரிய குழந்தையை எப்படிப் பெற்றெடுத்தேன்?” என ஹைன்ஸ் வாயடைத்து போயுள்ளார்.
இம்மாதம் 3ஆம் திகதி அனான் என்ற குழந்தை பிறந்துள்ளது. குழந்தையைக் காட்டும் படங்களை மருத்துவமனை Facebookஇல் பதிவிட்டிருக்கிறது. குழந்தையை ஓர் அற்புதம் என்றும் அது வருணித்துள்ளது.
அங்குப் பிறந்த குழந்தைகளில் இதுவே ஆகப்பெரியதாக இருக்கலாம் என்றது மருத்துவமனை.
(Visited 3 times, 1 visits today)