இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

one in, one out” ஒப்பந்தம் – பிரித்தானியாவில் இருந்து வெளியேற்றப்பட்ட முதல் புகலிடக்கோரிக்கையாளர்!

பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவிற்கு இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள வன் இன் – வன் அவுட் ஒப்பந்தத்தின் கீழ் எரித்திரியாவை சேர்ந்த நபர் ஒருவர் பிரித்தானியாவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து பாரிஸ் செல்லும் விமானத்தில் உள்துறை அதிகாரிகளுடன் அவர்  அனுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏர் பிரான்ஸ் விமானத்தில் அவர் இருந்ததை உள்துறை அலுவலகம் உறுதிப்படுத்தியது,

முதலில் சார்லஸ் டி கோல் விமான நிலையத்திற்கு வருகை தந்த அவர், விமானத்தை விட்டு வெளியேறிய உடனேயே இங்கிலாந்து அதிகாரிகளால்   மூன்று பிரெஞ்சு காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சிறிய படகுகள் கடப்பதைத் தடுக்கும் நம்பிக்கையில் புலம்பெயர்ந்தோரை பரிமாறிக்கொள்வதற்கான ஒரு வருட கால ஒப்பந்தத்தை இவ்விரு நாடுகளும் மேற்கொண்டுள்ளன.

பிரித்தானியாவில் சமீபகாலமாக புலம்பெயர் கோரிக்கையாளர்களுக்கான போராட்டங்கள் வலுவாக இடம்பெற்று வருகின்றன. குடியேறிகளை வெளியேற வலியுறுத்தி 1.50 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இது தொழிற்கட்சி அரசாங்கத்திற்கு பாரிய சவால்களை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது இந்த திட்டம் அமுற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

(Visited 3 times, 3 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்