இந்தோனேசியாவில் 6.1 ரிக்டர் அளவான நிலநடுக்கம் பதிவு!

இந்தோனேசியாவின் மத்திய பப்புவா மாகாணத்தில் இன்று (19.09) 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
பப்புவா மாகாணத்தில் உள்ள நபிர் நகருக்கு தெற்கே 28 கி.மீ தொலைவில் குறித்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக USGS தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் பல பொது வசதிகள் சேதமடைந்தன, ஆனால் உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்று தேசிய பேரிடர் தணிப்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அப்துல் முஹாரி தெரிவித்துள்ளார்.
(Visited 2 times, 2 visits today)