03 பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்தப் பின் உயிரை மாய்த்துக்கொண்ட இளம் தாய்!

உடுதும்பர, பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண் ஒருவர், தனது மூன்று குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து, பின்னர் தானும் விஷம் குடித்து இறந்ததாக போலீசார் உறுதிப்படுத்தினர்.
லுகேமியாவால் பாதிக்கப்பட்ட 34 வயதுடைய அவரது கணவர் இறந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
தம்பதியரின் 12, 10 மற்றும் 5 வயதுடைய மூன்று மகன்களும் லுகேமியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
விஷம் கொடுக்கப்பட்ட குழந்தைகள் தற்போது உடுதும்பர பிரதேச மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காவல்துறையினரின் கூற்றுப்படி, குழந்தைகளின் நிலை மேம்பட்டு வருவதால் அவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை எனக் கூறப்படுகிறது.
இறந்த பெண் மனநலக் கோளாறுக்காக சிகிச்சை பெற்று வந்ததாக போலீசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
(Visited 1 times, 2 visits today)