லண்டன் பொதுப் போக்குவரத்து அமைப்பு மீதான சைபர் தாக்குதல் – 02 இளைஞர்கள் மீது குற்றச்சாட்டு!

கடந்த 2024 ஆம் ஆண்டு லண்டன் பொதுப் போக்குவரத்து அமைப்பின் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதல் தொடர்பில் இரண்டு இளைஞர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் தேசிய குற்றவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேற்படி தாக்குதல் தொடர்பில் தல்ஹா ஜுபைர், 19, மற்றும் ஓவன் ஃப்ளவர்ஸ், 18, ஆகியோர் கணினி துஷ்பிரயோகச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் அமெரிக்காவின் மிகப்பெரிய சுகாதார அமைப்புகளில் ஒன்றான கலிபோர்னியாவின் சட்டர் ஹெல்த் தொடர்பான குற்றங்களுக்கும், SSM ஹெல்த் கேர் கார்ப்பரேஷனின் நெட்வொர்க்குகளில் ஊடுருவ மற்றவர்களுடன் சதி செய்ததற்கும் ஃப்ளவர்ஸ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிரான்ஸ்போர்ட் ஃபார் லண்டன் (TfL) மீது குறித்த சைபர் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த சேவையை மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர்.