கொழும்பில் குடியிருப்பு வளாகத்தில் இருந்து மீட்கப்பட்ட சீன நாட்டவரின் சடலம்!

தெஹிவளையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து விழுந்து இறந்ததாக சந்தேகிக்கப்படும் சீன நாட்டவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
தெஹிவளை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தொலைபேசி செய்தியின்படி, தெஹிவளை அல்விஸ் வீதியில் உள்ள ஒரு வீட்டின் பின்னால் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நாட்டில் தனியார் துறையில் பணிபுரியும் சீன நாட்டினர் குழு ஒன்று இந்த வீட்டிற்கு அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் தங்கியிருந்ததாகவும், குறித்த நபர் மேல் மாடியில் இருந்து விழுந்து இறந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சடலம் தற்போது கொழும்பு தெற்கு போதனா மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்து தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 3 times, 3 visits today)