ஐரோப்பிய நாடுகளில் வீடுகளுக்கு அனுப்பப்படும் பார்சல்கள் – அடுத்து நடக்கும் ஆபத்து!

பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் திட்டமிட்டு தீவைக்கும் சம்பவங்களில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ரஷ்ய வலையமைப்புடன் தொடர்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக லிதுவேனிய வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
வில்னியஸில் உள்ள வழக்கறிஞர் ஜெனரல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் சந்தேக நபர்கள் கூரியர் சேவையை பயன்படுத்தி மேற்படி தாக்குதல் சம்பவங்களை திட்டமிட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன் மூலம் வீட்டில் தயாரிக்கப்பட்ட வெடிபொருட்கள் கொண்ட சாதனங்கள் பார்சல்களாக அனுப்பிவைக்கப்படுகின்றன. அவற்றில் நேரம் பொருத்தப்பட்டுள்ளது. அவை குறிப்பிட்ட நேரம் முடிவடைந்ததுடன் தானாகவே வெடிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்யா, லிதுவேனியா, லாட்வியா, எஸ்டோனியா மற்றும் உக்ரைன் குடிமக்கள் என மொத்தம் 15 பேர் இந்த தாக்குதல்களை ஏற்பாடு செய்து நடத்தியதாக சந்தேகிக்கப்படுகிறார்கள்.
மூன்று பேருக்கு சர்வதேச கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறித்த விரிவான தகவல்கள் வெளியாகவில்லை.
இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.