260 பேரை பலியெடுத்த ஏர் இந்தியா விமான விபத்து – அமெரிக்காவில் வழக்கு தாக்கல்!

ஏர் இந்தியா ஜெட் விமானத்தில் இறந்த நான்கு பயணிகளின் குடும்பங்கள், அமெரிக்காவில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங் மற்றும் விமான பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான ஹனிவெல் மீது குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தவறான எரிபொருள் சுவிட்சுகள் விபத்துக்குக் காரணம் என்றும், விமானத்தின் வடிவமைப்பின் அபாயங்கள் குறித்து அறிந்திருந்தும் நிறுவனங்கள் “எதுவும் செய்யவில்லை எனவும் வழக்கு தாரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
லண்டன் கேட்விக் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் 171, அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது, இதில் 260 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(Visited 2 times, 2 visits today)