அமெரிக்க வட்டி விகிதத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

அமெரிக்க வட்டி விகிதத்தைக் கால் சதவீதம் குறைப்பதற்கு அமெரிக்காவின் மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
இவ்வாண்டின் எஞ்சிய பகுதியில் அந்த விகிதம் மேலும் குறைக்கப்படும் என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பால் நியமிக்கப்பட்ட மத்திய வங்கி அதிகாரிகள் பெரும்பாலானோர் அந்நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்தனர்.
வட்டி விகிதம் இவ்வாண்டு மேலும் இரு முறை கால் சதவீதம் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிரம்ப் நிர்வாகத்தின் வர்த்தகக் கொள்கைகளால் பணவீக்கம் ஏற்படாது என்ற நம்பிக்கையை அது வெளிப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
மாறாக பலவீனம் அடைந்துவரும் பொருளாதார வளர்ச்சி, அதிகரிக்கக்கூடிய வேலையின்மை ஆகியவை பற்றியே அதிகாரிகள் அதிகம் கவலைப்படுகின்றனர்.
குறிப்பாக, வேலையின்மையைச் சமாளிக்க வட்டி விகிதம் குறைக்கப்பட்டிருப்பதாக வங்கியின் தலைவர் ஜெரோம் பவல் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.