சீனாவில் புதிய iPhone 17 கையடக்க தொலைபேசி மோகம் தீவிரம்

சீனாவில் புதிய iPhone 17 கையடக்க தொலைபேசி மோகம் சற்றும் குறையாமல் தீவிரமடைந்துள்ளது.
புதிய கையடக்க தொலைபேசி முன்பதிவு சென்ற வெள்ளிக்கிழமை தொடங்கியது. சீனாவின் JD.com தளத்தில் iPhone 17 கையடக்க தொலைபேசிகளுக்கான முன்பதிவு புதிய சாதனை படைத்தது.
முந்தைய iPhone திறன்பேசிகளுக்கான முன்பதிவை அது மிஞ்சிவிட்டது.
256 கிகாபைட் அளவிலான iPhone 17 ரகத் திறன்பேசியே ஆகப் பிரபலமாக இருப்பதாக SCMP செய்தி நிறுவனம் தெரிவித்தது. மக்கள் அலைமோதியதால் Apple இணையப்பக்கத்தில் திறன்பேசிகளை வாங்குவதிலும் சிலர் சிரமத்தை எதிர்நோக்கினர்.
குவாங்சோவ், குவாங்டொங் பகுதிகளில் iPhone 17 திறன்பேசிகளை வாங்க விரும்புவோர் அக்டோபர் 15ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டும் என்று SCMP குறிப்பிட்டது.
சீனாவில் மற்ற திறன்பேசி நிறுவனங்களிடமிருந்து பலத்த போட்டி இருந்தாலும் Apple மீதான ஈர்ப்பு கொஞ்சமும் குறையவில்லை என்று சொல்லப்படுகிறது.