எயார் இந்தியா விபத்தில் உயிர் பிழைத்தவரால் குடும்பத்துடன் இணைய முடியாத பரிதாப நிலை

எயார் இந்தியா விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபர் மீண்டும் விமானத்தில் பயணிக்க பயந்து இங்கிலாந்து திரும்பவில்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஜூன் மாதத்தில் நடந்த விபத்தில் 260 பேர் கொல்லப்பட்டனர்.
அந்த விபத்தில் இருந்து தப்பிய ஒரே நபர் விஸ்வஷ் குமார் ரமேஷ் முகம் மற்றும் மார்பில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் விபத்துக்குப் பிறகு அவர் மனநல சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் விஸ்வஷ் குமாரின் 35 வயது சகோதரரும் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து இந்திய அதிகாரிகள் பல கோணங்களில் விசாரணையைத் தொடங்கியுள்ளனர், மேலும் முதற்கட்ட விசாரணையில் விமானத்தின் எரிபொருள் சுவிட்ச் துண்டிக்கப்பட்டதால் விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
விசாரணையில் வெளிநாட்டு விமான தொழில்நுட்ப நிபுணர்களின் உதவியும் கோரப்பட்டுள்ளது.