சிகிரியாவின் கண்ணாடிச் சுவரைச் சேதப்படுத்திய பெண் – அதிரடியாக கைது செய்த பொலிஸார்

சிகிரியாவிலுள்ள கண்ணாடிச் சுவரில் பெண் ஒருவர் தனது பெயரை எழுதிச் சேதப்படுத்தியுள்ளார்.
இதனால் குறித்த பெண் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கொண்டை ஊசி மூலம் ஆறு ஆங்கில எழுத்துகளை எழுதியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட பெண் அவிசாவளையைச் சேர்ந்த 21 வயதுடையவர் ஆவார்.
குறித்த பெண் நண்பர்கள் குழுவுடன் சிகிரியாவை பார்வையிட சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட பெண்ணை இன்று தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் முன்னிலைப்படுத்தவுள்ளனர்.
(Visited 1 times, 1 visits today)