இஸ்ரேலை தண்டிக்கவேண்டும் – உலக நாடுகளிடம் கட்டார் விடுத்த கோரிக்கை

உலக நாடுகள் அவற்றின் இரட்டை நிலைப்பாட்டை நிறுத்திக்கொண்டு இஸ்ரேலைத் தண்டிக்கவேண்டும் என்று கட்டார் கோரிக்கை விடுத்துள்ளது.
அரபு, முஸ்லிம் தலைவர்கள் உச்சநிலைச் சந்திப்பை நடத்தவிருக்கும் வேளையில் கட்டார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல்-தானி கோரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ருபியோ (Marco Rubio) இஸ்ரேலியத் தலைவர்களைச் சந்திக்கும் வேளையில் அரபு உச்சநிலைச் சந்திப்பும் இடம்பெறுகிறது.
சென்ற வாரம் கட்டாரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு எதிராகத் ஒற்றுமையை வெளிப்படுத்த அரபுத் தலைவர்கள் கூடுகின்றனர்.
(Visited 2 times, 2 visits today)