காஸா தாக்குதலில் சட்ட திட்டங்களைப் பின்பற்றவில்லை! ஒப்புக் கொண்ட இஸ்ரேல் முப்படை தளபதி

இதுவரை காஸா மீது நடத்திய போர் நடவடிக்கைகளில், தாம் சர்வதேச சட்டங்களை பின்பற்றவில்லை என இஸ்ரேல் முப்படை தளபதி ஒப்புக்கொண்டுள்ளார்.
“காஸாவில் 22 லட்சம் மக்களில் 10 சதவீதத்துக்கும் மேல் பேர் கொல்லப்பட்டோ, காயமடைந்தோ உள்ளனர். இது ஒரு நாகரிகமான போர் அல்ல. யாரும் நீதியை கருத்தில் கொள்ளவில்லை.
மேலும், தனது நடவடிக்கைகளை இராணுவ சட்ட ஆலோசகர் யிபாத் தோமா-யெருஷலாமி உள்ளிட்டோர் கட்டுப்படுத்தவில்லை.
இதனால், இஸ்ரேல் .ராணுவ சட்ட ஆலோசகர்கள் வெறும் ஆலோசனை வழங்குபவர்களாக மட்டுமே உள்ளனர்” என இஸ்ரேல் முப்படை தளபதி ஹொ்ஸி ஹலேவி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், காஸா சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, இதுவரை 64,803 பேர் உயிரிழந்துள்ளனர். 1,64,264 பேர் காயமடைந்துள்ளனர். இதை இஸ்ரேல் மறுத்துவந்தாலும், ஹலேவியின் குறிப்பு அந்த புள்ளிவிவரங்களை உறுதிப்படுத்துகிறது.