புதிய பிரதமர் மற்றும் எரிசக்தி அமைச்சரை நியமித்த அல்ஜீரிய ஜனாதிபதி

அல்ஜீரிய ஜனாதிபதி அப்தெல்மட்ஜித் டெபவுன், அமைச்சரவை மறுசீரமைப்பில், நாட்டின் புதிய பிரதமராக சிஃபி கிரிப்பையும், எரிசக்தி அமைச்சராக மௌரத் அட்ஜலையும் நியமித்துள்ளார்.
கடந்த மாதம் டெப்பவுன் நாதிர் லார்பாவின் பதவிக்காலம் முடிவடைந்ததில் இருந்து தொழில்துறை அமைச்சராக இருந்த சிஃபி கிரிப், தற்காலிக பிரதமராகப் பணியாற்றி வந்தார்.
அல்ஜீரியாவின் அரசு மின்சார நிறுவனமான சோனெல்காஸின் தலைமை நிர்வாக அதிகாரியாக மௌரத் அட்ஜல் இருந்தார்.
நிதி, வர்த்தகம் மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் தங்கள் பதவிகளில் மேலும் தொடர்வதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
எரிவாயு உற்பத்தி செய்யும் வட ஆப்பிரிக்க நாடு பல ஐரோப்பிய நாடுகளுக்கு எரிசக்தி வழங்குநராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
(Visited 2 times, 1 visits today)