நேபாளத்தின் இடைக்கால அரசாங்கத்திற்கு ஆதரவை தெரிவித்த இந்தியா

நேபாளத்தில் சுஷிலா கார்கி தலைமையில் ஒரு புதிய இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டதற்கு இந்திய அரசாங்கம் ஆதரவை தெரிவித்துள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சகம், இது அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம். நெருங்கிய அண்டை நாடு, ஜனநாயக நாடு மற்றும் நீண்டகால வளர்ச்சி கூட்டாளியாக, இரு நாட்டு மக்களுக்காகவும் அவர்களின் நல்வாழ்வு மற்றும் செழிப்புக்காகவும் இந்தியா நேபாளத்துடன் தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்றும் என்று தெரிவித்துள்ளது.
மேலும், சுசிலா கார்கிக்கு பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், “நேபாள இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள சுசிலா கார்கிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நேபாள மக்களின் அமைதி, முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.