பாகிஸ்தானில் இராணுவ தொடரணியை தாக்கிய இஸ்லாமிய போராளி குழு!

வடமேற்கு பாகிஸ்தானில் இராணுவ தொடரணியை இஸ்லாமிய போராளி குழுவினர் குறிவைத்து தாக்கியுள்ளனர்.
இதனையடுத்து இராணுவத்தினருக்கும் போராளிகளுக்கும் இடையில் துப்பாக்கிச்சண்டை இடம்பெற்றுள்ளது. இதில் 12 பாகிஸ்தான் வீரர்களும் 13 இஸ்லாமிய போராளிகளும் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள தெற்கு வஜீரிஸ்தானின் மலைப்பாங்கான படார் பகுதியில் இராணுவ வாகனங்கள் பயணித்தபோது குறித்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 1 times, 1 visits today)