உக்ரைன் தலைநகர் கீய்வுக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட இளவரசர் ஹரி!

இளவரசர் ஹரி உக்ரைனின் தலைநரகான கீய்வுக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனியர்களை ஆதரிக்கும் அமைப்பின் அழைப்பை தொடர்ந்து அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது போரில் காயமடைந்த ராணுவ வீரர்களின் மீட்புக்கு “முடிந்த அனைத்தையும்” செய்ய விரும்புவதாகக் கூறினார்.
காயமடைந்தவர்களுக்கு செயற்கை மூட்டுகள் மற்றும் மறுவாழ்வு வழங்க உதவுவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
ரஷ்யாவின் உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பின் விளைவாக பல்லாயிரக்கணக்கான வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உடல் உறுப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளனர்.
உக்ரைன் இராணுவ உயிரிழப்புகள் குறித்த துல்லியமான புள்ளிவிவரங்களை வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
(Visited 1 times, 1 visits today)