பியர் அருந்துவோரின் வியர்வை வாசனையை அதிகம் ஈர்க்கும் நுளம்புகள் – ஆய்வில் தகவல்

பியர் உள்ளிட்ட மதுபானங்களை அருந்தும் மனிதர்களின் வியர்வை வாசனை, நுளம்புகளை அதிகம் ஈர்க்கும் என தெரியவந்துள்ளது.
நெதர்லாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் பெலிக்ஸ் ஹோல் நடத்திய ஆயில் இந்த விடயம் கண்டறிந்துள்ளது.
இந்த ஆய்வில் 500 பேர் பங்கேற்றனர். அவர்களை ஒரு மூடப்பட்ட அறையில் வைத்து, ஒவ்வொருவரும் கைகளை மட்டும் நுளம்புகள் அடைக்கப்பட்ட கண்ணாடிக் குழாய்களில் நுழைக்கச் செய்யப்பட்டது.
அதன் பின்னர், யாரை அதிகம் கொசுக்கள் கடிக்கின்றன என்பது பதிவுசெய்யப்பட்டது.
அதில், பியர் உள்ளிட்ட மதுபானங்களை அருந்தியவர்கள் மீது நுளம்புகள் அதிகம் கடித்திருப்பது தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வு, கொசுக்களின் நடத்தையைப் புரிந்துகொள்வதோடு, டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய்களுக்கான தடுப்புத் திட்டங்களில் முக்கிய பங்கு வகிக்கக்கூடியதாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.