தேடலை மாற்றும் 4 கூகுள் ட்ரிக்ஸ்

கூகுள் என்பது நமக்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் தேடித் தரும் ஒரு நண்பன். ஆனால், கூகுளை வெறும் தேடலுக்கு மட்டும் பயன்படுத்தாமல், சில ரகசிய தந்திரங்களை வைத்து அதை இன்னும் ஸ்மார்ட்டாகப் பயன்படுத்தலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் நேரத்தைச் சேமிக்கவும், சில வேடிக்கையான விஷயங்களைச் செய்யவும் உதவும் நான்கு சூப்பர் கூகுள் ட்ரிக்ஸ்கள் இங்கே!
1. கூகுளே டைமர், கூகுளே ஸ்டாப்வாட்ச்!
உங்களுக்குத் திடீரென டைமர் தேவைப்படுகிறதா? சமையல் செய்யும்போதோ, உடற்பயிற்சியின்போதோ, அல்லது படிக்கும்போதோ நேரத்தைக் கணக்கிட ஒரு ஆப் தேடி அலைய வேண்டாம். கூகுளில் “set timer for 10 minutes” அல்லது “stopwatch” என்று டைப் செய்தால் போதும், உடனே உங்கள் திரையில் டைமர் ஓடத் தொடங்கும். இது மிகவும் எளிதானது!
2. ஒரு குறிப்பிட்ட வெப்சைட்டில் மட்டும் தேடலாம்!
குறிப்பிட்ட வெப்சைட்டில் உள்ள தகவலை மட்டும் தேட விரும்புகிறீர்களா? அந்த வெப்சைட்டின் தேடல்வசதி சரியாக வேலை செய்யவில்லையா? கவலை வேண்டாம்! கூகுளைப் பயன்படுத்தி இதைச் செய்யலாம். கூகுள் தேடல் பட்டியில் site:bbc.co.uk cake recipes என டைப் செய்தால், பிபிசி வெப்சைட்டில் உள்ள கேக் ரெசிபிகள் மட்டுமே உங்களுக்குக் காண்பிக்கப்படும். இந்த ட்ரிக்ஸை பயன்படுத்தி, எந்த வெப்சைட்டிலும் நீங்கள் விரும்பிய தகவலைத் துல்லியமாகத் தேடலாம்.
3. தெரியாத வார்த்தைக்கு உடனடி விளக்கம்!
புதிய வார்த்தையைப் பார்த்ததும், அதன் அர்த்தம் என்னவென்று தெரியவில்லையா? இனி டிஸ்னரியை தேடவேண்டாம். கூகுளில் define:serendipity என்று டைப் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான அர்த்தம், அதன் உச்சரிப்பு மற்றும் உதாரணங்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும். இந்த ட்ரிக்ஸ் மாணவர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
4. நாணயம் சுண்டவோ, பகடை உருட்டவோ கூகுள் போதும்!
சற்று நேரம் வேடிக்கையாக இருக்க வேண்டுமா? அல்லது ஒரு முடிவெடுக்க நாணயம் சுண்ட வேண்டுமா? “flip a coin” அல்லது “roll a dice” என்று கூகுளில் டைப் செய்தால் போதும், உங்களுக்காக கூகுளே நாணயத்தைச் சுண்டி முடிவைச் சொல்லிவிடும் அல்லது பகடையை உருட்டிவிடும். இது மிகவும் எளிமையான மற்றும் வேடிக்கையான வழி. இந்த ட்ரிக்ஸ்களைப் பயன்படுத்தி, உங்கள் தினசரி கூகுள் தேடலை இன்னும் சிறப்பாக்குங்கள்.