கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை – நடுவர் குழுவை அறிவித்த ICC
8 அணிகள் பங்கேற்கும் பெண்களுக்கான 13ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா நடத்துகிறது. 33 நாட்களாக நடைபெறும் இந்த மெகா தொடரில், 31 போட்டிகள் நடத்தப்பட இருக்கின்றன.
இந்த நிலையில் போட்டிக்கான நடுவர் குழுவை ICC அறிவித்துள்ளது. இதில் இடம் பிடித்துள்ள 14 கள நடுவர்கள், நான்கு போட்டி நடுவர்கள் (match referee) என அனைவரும் பெண்கள் ஆவார்கள். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதன்முறையாக முழுவதும் பெண்கள் கொண்ட நடுவர் குழுவை ICC அறிவித்துள்ளது.
கள நடுவர்கள் பட்டியலில் கிளைர் போலாசாக், ஜேக்லின் வில்லியம்ஸ், சுயே ரெட்பெர்ன் உள்ளிட்ட சிறந்த பெண் கள நடுவர்கள் இடம்பிடித்துள்ளனர்.
இவர்கள் ஏற்கனவே இரண்டு உலக கோப்பை தொடரில் நடுவர்களாக பணியாற்றியுள்ளனர். லாரன் அகன்பாக் என்பவர் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நடுவராக பணியாற்றியவர்.
மகளிர் கிரிக்கெட்டின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம், விளையாட்டின் அனைத்துத் துறைகளிலும் இன்னும் பல வெற்றிக் கதைகளுக்கு வழி வகுக்கும் என்று ICC தலைவர் ஜெய் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.





