ஜப்பான் எயார்லைன்ஸ் விமானத்தில் மது அருந்திய விமானியால் சர்ச்சை – 3 விமானங்கள் தாமதம்

ஜப்பான் எயார்லைன்ஸின் விமானி மது அருந்தியதால் 3 விமானங்கள் தாமதமடைந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தையடுத்து இவ்வாண்டு இரண்டாவது முறையாக அந்நாட்டின் போக்குவரத்து அமைச்சு நிறுவனத்தைக் கண்டித்திருக்கிறது.
விமான நிறுவனத்தின் தலைவர் மிட்சுக்கோ தொத்தொரி செய்தியாளர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். நடந்த சம்பவத்திற்கு அவர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
கடந்த மாதம் 28ஆம் திகதி விமானி ஒருவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் அவரால் மறுநாள் ஜப்பானின் நகோயாவுக்கு விமானத்தை ஓட்டிச் செல்ல இயலவில்லை.
அதனால் 3 விமானங்கள் தாமதமடைந்தன. ஒரு விமானம் 18 மணி நேரம் வரை தாமதத்தை எதிர்நோக்கியது.
(Visited 2 times, 2 visits today)