ஜெர்மனியில் 30 ஆண்டுகளாக ஒரே எண்களை தேர்வு செய்த பெண் கிடைத்த அதிஷ்டம்

ஜெர்மனியின் பெர்லின் நகரைச் சேர்ந்த 50-60 வயதுள்ள ஒரு பெண், கடந்த 30 ஆண்டுகளாக ஒவ்வொரு வாரமும் ஒரே லொத்தர் சீட்டிழுப்பு எண்களை தேர்ந்தெடுத்து வந்தார்.
நீண்ட கால காத்திருப்புக்கு பலனாக, தற்போது அவ்வெண்கள் பொருந்தி 4.4 மில்லியன் யூரோவை லொத்தர் சீட்டிழுப்பில் வெற்றி பெற்றுள்ளார்.
1996ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் 5, 11, 13, 39, 42, 48 என்ற எண்களைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்த இவர், லோட்டோ பெர்லின் மூலம் கடந்த வாரம் வெற்றி பெற்றார்.
இது இந்த ஆண்டில் பெர்லினில் பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய வெற்றியாகும்.
வெற்றி பெற்றவர்களுக்கு தொலைபேச அழைப்புகள் இல்லாமல், அஞ்சல் மூலம் அதிகாரபூர்வமாக தகவல் தெரிவிக்கப்படும். பின்னர், லோட்டோ அலுவலகத்தில் ஆலோசனையும் வழங்கப்படும்.
ஜெர்மனியில், 2024 ஆம் ஆண்டில் மட்டும் 8.5 பில்லியன் யூரோ மதிப்பிலான லொத்தர் சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா மாநிலம் மிக அதிக லொத்தர் மில்லியனர்களை பெற்றுள்ளது.