இலங்கை

யாழில் பிறந்து 21 நாட்களேயான ஆண் சிசுவுக்கு நேர்ந்த துயரம்

யாழில் பிறந்து 21 நாட்களேயான ஆண் சிசு ஒன்று வாந்தியெடுத்தபின் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சுன்னாகம் – சபாபதிப்பிள்ளை வீதியைச் சேர்ந்த தம்பதிகளின் சிசுவே உயிரிழந்தது.

தாயார் இன்று சிசுவிற்கு பாலூட்டி உறங்க வைத்த பின்னர் மதியம் 1.30 அளவில் சிசுவை தூக்கத்திலிருந்து எழுப்பியவேளை சிசு வாந்தியெடுத்துவிட்டு அசைவற்று காணப்பட்டது.

இந்நிலையில், தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்குக் கொண்டு சென்றவேளை, சிசு ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

சிசுவின் உடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

மேலும், சிசுவின் உடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

(Visited 3 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்