விளையாட்டு

ஆசிய கோப்பையில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

”ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய லெவன் அணியில் சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கும்,” என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட்சில் ஆசிய கோப்பை ‘டி–20’ தொடர் (செப். 9–28) நடக்க உள்ளது. இந்தியா, இலங்கை உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.

இப்போட்டிகளை சோனி ஸ்போர்ட்ஸ் சானலில் காணலாம். தவிர, ‘சோனி ஸ்போர்ட்ஸ் டென் 4 தமிழ்’ சேனலில் தமிழ் மொழியில் வர்ணனை செய்யப்பட உள்ளது.

ஆசிய கோப்பை குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் அளித்த பேட்டி:

கீப்பர்-பேட்டர் சாம்சனுக்கு துவக்கத்தில் சில போட்டிகளில் வாய்ப்பு தரப்படலாம். ‘டாப்-3’ அல்லது பின் வரிசை, ‘பினிஷிங்’ என அனைத்து இடத்திலும் அசத்துவார். பிரிமியர் தொடரில் ‘பினிஷராக’ ஜொலித்த கீப்பர் ஜிதேஷ் சர்மாவும் போட்டியில் உள்ளதால், தேர்வுக்குழுவுக்கு தலைவலி தான்.

என்னைப் பொறுத்தவரையில் சுப்மன்-அபிஷேக் ஜோடிக்கு துவக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

முதல் போட்டியில் வருண் இடம் பெறலாம். வருண், அக்சர், குல்தீப்புடன், 2 வேகப்பந்து வீச்சாளர்கள், மூன்றாவது ‘வேகத்திற்கு’ ஹர்திக் பாண்ட்யா என, இந்திய அணி 6 பவுலர்களுடன் களமிறங்கலாம்.

பும்ரா திறமை குறித்து எவ்வித சந்தேகமும் இல்லை. ‘டி-20’ல் 4 ஓவர் மட்டும் வீசுவார் என்பதால், இவருக்கு பணிச்சுமை இருக்காது.

பிரிமியர் தொடரில் ரன் மழை பொழிந்த சுப்மன், தொடர்ந்து சிறப்பாக செயல்படுவார்.

(Visited 1 times, 1 visits today)

SR

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ