அமெரிக்காவில் போயிங் நிறுவனத்தைச் சேர்ந்த 3,200 பேர் வேலைநிறுத்தம்

அமெரிக்காவில் போயிங் விமான நிறுவனத்தைச் சேர்ந்த 3,200 தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள மிசௌரி மற்றும் இல்லினாய்ஸ் மாகாணங்களில் இந்த வேலை நிறுத்தம் முன்கெடுக்கப்பட்டுள்ளது.
ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக ஆகஸ்ட் 4-ஆம் திகதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அவர்களுடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
அவர்களுக்குப் பதிலாக நிரந்தர ஊழியர்களை நியமிக்கப்போவதாக போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது.
(Visited 2 times, 2 visits today)