அறிவியல் & தொழில்நுட்பம்

மைக்ரோசாப்ட் லென்ஸ் ஆப் நிறுத்தம்

மைக்ரோசாஃப்ட் லென்ஸ் பயனுள்ள செயலியாக இருந்தாலும், அதற்கு மாற்றாக நீங்கள் பயன்படுத்தக்கூடிய பல சிறந்த PDF ஸ்கேனர் ஆஃப்கள் உள்ளன. டிஜிட்டல் முறையில் ஆவணங்களில் கையெழுத்திடுவது, புத்தக பக்கங்களை ஸ்கேன் செய்வது (அ) ரசீதுகளைப் பாதுகாப்பது போன்ற வேலைகளுக்கு உதவும் 5 சிறந்த PDF ஸ்கேனர் ஆஃப்கள் பற்றி பார்ப்போம்.

1. OneDrive

மைக்ரோசாஃப்ட் லென்ஸ் ஆஃப்-க்கு ஒரு சிறந்த மாற்று OneDrive. இதில் லென்ஸ் ஆஃப்பின் முக்கிய அம்சங்கள் அனைத்தும் சேர்க்கப்பட்டுள்ளன. லென்ஸ் இலவசமாக இருந்தாலும், OneDrive-ல் ஸ்கேன் செய்ய நீங்கள் கணக்கில் உள்நுழைய வேண்டும். மேலும், ஸ்கேன் செய்யும் அம்சத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பே, இது அடிக்கடி கிளவுட் ஸ்டோரேஜ் சலுகைகளை காண்பித்து எரிச்சலூட்டுகிறது. இருப்பினும், லென்ஸில் இருந்த நுட்பமான அம்சங்களான கோப்பு வகை தேர்வு மற்றும் OCR போன்றவை இதில் இல்லை என்றாலும், OneDrive-ல் ஸ்கேன் செய்வது எளிமையானது.

2. Google Drive

கிளவுட் ஸ்டோரேஜ் பிரிவில், கூகிள் நிறுவனத்தின் Drive செயலி அடுத்த மாற்று. உங்கள் Android போன்களில் இந்த ஆஃப் ஏற்கெனவே இருப்பதால், நீங்கள் கூடுதலாக எதையும் பதிவிறக்கம் செய்ய வேண்டியதில்லை. இது தானாகவே ஸ்கேன் செய்யும் வசதியைக் கொண்டிருப்பதால், பைல்களை ஸ்கேன் செய்வது மேலும் எளிதாகிறது. மேலும், இது பைல்களை சரிசெய்தல் மற்றும் சுத்தம் செய்யும் கருவிகள் போன்ற பல்வேறு எடிட்டிங் வசதிகளை வழங்குகிறது. PDF அல்லது JPEG பைல் வடிவங்களைத் தேர்வு செய்யவும், சேமிக்கும் இடத்தை மாற்றவும், எந்த கூகிள் அக்கவுண்ட்டில் சேமிக்க வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும் இது பயனர்களுக்கு அதிக கட்டுப்பாட்டை வழங்குகிறது. மொத்தத்தில், மைக்ரோசாஃப்ட் லென்ஸ்க்கு ஒரு சிறந்த மாற்றாக Google Drive உள்ளது, ஆனால் அது லென்ஸுக்கு நிகரானது அல்ல.

3. OSS Document Scanner

ஓப்பன் சோர்ஸ் வகை PDF ஸ்கேனர் செயலிகளில் OSS Document Scanner உள்ளது. இது ஆவணங்களை ஸ்கேன் செய்வதற்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டதால், OneDrive மற்றும் Google Drive-ஐ விட இது சிறப்பாக செயல்படுகிறது. இதன் எளிமையான UI சிறப்பாக உள்ளது. Google Drive-ஐ போல, இதுவும் ஸ்கேன் செய்ய விரும்பும் ஆவணத்தை தானாகவே கண்டறிந்து படமெடுக்கும். பின்னர், படம் சிறப்பாகப் பொருந்தும்படி செதுக்கும். ஸ்கேன் தரமும் திருப்திகரமாகவே உள்ளது.

OSS Document Scanner பல்வேறு பட எடிட்டிங் மற்றும் மேம்படுத்தும் கருவிகள், மற்றும் OCR வசதியையும் வழங்குகிறது. கோப்பு தரத்திற்கான பல்வேறு விருப்பங்கள், மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன. முக்கிய ஆவணங்களை ஸ்கேன் செய்ய நீங்கள் பயோமெட்ரிக் பூட்டு (biometric lock) வசதியைப் பயன்படுத்தலாம்.

4. Adobe Scan

PDF வடிவத்தின் முன்னோடியான அடோப் நிறுவனத்தின் செயலி Adobe Scan. நீங்கள் ஏற்கனவே பிற அடோப் செயலிகளைப் பயன்படுத்துபவராக இருந்தால், இந்த செயலி மிகவும் பயனுள்ளது. இது ஸ்கேன் செய்த ஆவணங்களை அகிரோபட் ரீடருக்கு அனுப்பி மேலும் எடிட் செய்ய உதவுகிறது. இதில் ஆவணங்களுக்கு கடவுச்சொல் அமைப்பது அல்லது பல கோப்புகளை ஒன்றாக இணைப்பது போன்ற பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன. இந்த செயலி ஏ.ஐ. அம்சங்களையும் கொண்டுள்ளது. உதாரணமாக, நீங்கள் ஸ்கேன் செய்த ஆவணங்களில் உள்ள உள்ளடக்கத்தை தேட முடியும். எனினும், ஒரு அடோப் கணக்கு இல்லாமல், இதன் எந்த அம்சத்தையும் பயன்படுத்த முடியாது.

5. Clear Scanner

Play Store-ல் Clear Scan என்று அறியப்படும் இந்த PDF ஸ்கேனர் செயலி, இந்த பட்டியலில் உள்ள மற்ற செயலிகளில் இல்லாத பல அம்சங்களைக் கொண்டுள்ளது. இதில் ஸ்கேனிங் ரெசல்யூஷனை தேர்வு செய்யலாம், மேலும் மின்னஞ்சல் முகவரியை ஏற்கனவே உள்ள ஒரு தலைப்புடன் அமைத்துக்கொள்ளலாம். Clear Scan-ன் யு.ஐ. மிக எளிமையாக உள்ளது. இது பைல்களை ஒழுங்கமைக்க ஃபோல்டர்களை உருவாக்கவும் அனுமதிக்கிறது. இதன் ஸ்கேனிங் செயல்திறன் சிறப்பாக உள்ளது, மேலும் OCR அம்சமும் நம்பகத்தன்மையுடன் செயல்படுகிறது. நீங்கள் ஸ்கேன்களுக்கு குறிப்புகள் சேர்க்கவும், கையொப்பங்கள் சேர்க்கவும், மேலும் ஸ்கேன்களை நீங்கள் விரும்பும் தரத்தில் PDF ஆக சேமிக்கவும் முடியும். இந்த செயலி இலவசமாக இருந்தாலும், அதில் விளம்பரங்கள் இருக்கும். ஒரு முறை கட்டணம் செலுத்துவதன் மூலம் விளம்பரங்களை நீக்கலாம்.

(Visited 2 times, 2 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்