சாட்ஜிபிடியை நம்பி பயணம் செய்த ஸ்பெயின் நாட்டவருக்கு விமான நிலையத்தில் சிக்கல்

ஸ்பெயின் நாட்டவர் ஒருவர் போர்ட்டோ ரிக்கோவுக்கு செல்லும் ஆவணங்கள் தேவையா என்பதை சாட்ஜிபிடியிடம் கேட்டு பயணித்து சிக்கலில் சிக்கியுளளார்.
ஆனால், விமான நிலையத்தில் அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தியபோதுதான் தகவல் தவறானது என்பதை அவர் உணர்ந்தார்.
இந்த சம்பவத்தை அவர் TikTok-இல் காணொளியாக பகிர்ந்துள்ளார். கண்ணீருடன் தோன்றும் அவரை இணையத்தில் பெரும்பாலானவர்கள் ஆறுதல் கூறவில்லை. மாறாக, தேவையான அதிகாரப்பூர்வ தகவல்களை சரிபார்க்காமல் செயற்கை நுண்ணறிவைப் பின்பற்றியதற்காக கடுமையாக விமர்சித்தனர்.
“அரசாங்க இணையதளங்களை பார்த்திருக்க வேண்டியது” என்றும், “AI நம் அனைவரையும் முட்டாள்களாக்குகிறது” என்றும் சிலர் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிகழ்வு, செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்தும் போது அதிகாரப்பூர்வ ஆதாரங்களை தவிர்க்கக் கூடாது என்பதை மீண்டும் நினைவூட்டுகிறது.