இலங்கை தங்கநகர் பிரதேசத்தில் யானை தாக்கியதில் நபரொருவர் உயிரிழப்பு

திருகோணமலை சேறுநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தங்கநகர் பிரதேசத்தில் யானை தாக்கியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று (30) காலையில் இடம்பெற்றுள்ளது.
தன்னுடைய வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது யானை தாக்கியதாகவும் தெரிய வந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த ராசேந்திரன் லிங்கரத்ணம் (58வயது ) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சேறுநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
(Visited 6 times, 1 visits today)