ஆசியா செய்தி

ஜப்பானில் கையடக்க தொலைபேசி பயன்பாட்டை கட்டுப்படுத்த முயற்சி! எதிர்க்கும் மக்கள்

ஜப்பானின் டோயோகே நகர மக்களின் கையடக்க தொலைபேசி பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய பரிந்துரையுடன் முன்வைக்கப்பட்டுள்ளது.

பரிந்துரைகளுக்கமைய, வேலை மற்றும் பாடசாலை நேரங்களை தவிர, தினமும் 2 மணி நேரம் மட்டுமே கையடக்க தொலைபேசி பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என கூறப்படுகிறது.

இந்த பரிந்துரை, டோயோகே நகரில் வசிக்கும் சுமார் 69,000 மக்களுக்கு பொருந்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இப்பரிந்துரை தற்போது நகரத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் விவாதிக்கப்படுகின்றது.

எனினும், இது கட்டாயமாக அல்ல என்றும், கடுமையான நடைமுறைகள் எதுவும் இருக்காது என்றும் டோயோகே மேயர் தெரிவித்துள்ளார்.

மக்கள் தங்கள் கையடக்க தொலைபேசி பயன்பாட்டை குறைப்பதற்கான விழிப்புணர்வை உருவாக்குவதே இந்நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும் என அவர் கூறினார்.

பரிந்துரையை மீறினாலோ எந்தவொரு தண்டனையும் இல்லையென்பதும் குறிப்பிடத்தக்கது. பரிந்துரை எளிதில் ஏற்கப்பட்டால், ஒக்டோபர் மாதம் சட்டமாக்கப்படலாம்.

ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட சுமார் 120 குடியிருப்பாளர்களில், 80 சதவீதமானோர் இந்த பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும், பரிந்துரையின் கீழ், தொடக்கநிலை மாணவர்கள் இரவு 9 மணி வரை மற்றும் பெரியவர்கள் இரவு 10 மணி வரை மட்டுமே திறன்பேசியைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

(Visited 3 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி