ட்ரம்பின் வரிகள் சட்டவிரோதமானவை – அமெரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பெரும்பாலான வரிகள் சட்டவிரோதமானவை என்று அமெரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இது, அவரது வெளியுறவுக் கொள்கை நிகழ்ச்சி நிரலை மாற்றக்கூடிய ஒரு சட்ட மோதலை ஏற்படுத்தியுள்ளதாக கருதப்படுகிறது.
இந்த தீர்ப்பு, உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகளின் மீது விதிக்கப்பட்ட ட்ரம்பின் “பரஸ்பர” வரிகளையும், சீனா, மெக்சிகோ மற்றும் கனடா மீது விதிக்கப்பட்ட பிற வரிகளையும் தடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், அவசரக்கால பொருளாதார அதிகாரச் சட்டத்தின் கீழ், இந்த வரிகள் அனுமதிக்கப்பட்டன என்ற டிரம்பின் வாதத்தை அமெரிக்கப் பிராந்திய மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
அவை “சட்டத்திற்கு முரணானது என்பதால் செல்லாது” என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
எனினும் இந்த தீர்ப்புக்கு ட்ரம்ப் நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் சவால் செய்ய முடியும் என்பதற்கு, அவகாசம் அளிக்கும் வகையில் இந்த தீர்ப்பு அக்டோபர் 14 வரை நடைமுறைக்கு வராது என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், குறித்துத் தீர்ப்பு நடைமுறைக்கு வந்திருந்தால், அதன் முடிவு உண்மையில் அமெரிக்காவை அழித்துவிடும் என்று, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், தமது ட்ரூத் சோஷியல் பதிவில், நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்துள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்றம், இந்த வரிகள் நீக்கப்பட வேண்டும் என்று தவறாகக் கூறியது, ஆனால் இறுதியில் அமெரிக்கா வெற்றி பெறும் என்பது அவர்களுக்குத் தெரியும் என்றும் ட்ரம்ப் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.