இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

ஈரானில் உள்ள ஜெர்மனியர்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவிப்பு

ஈரானில் உள்ள தனது குடிமக்கள் விரைவில் நாட்டை விட்டு வெளியேறவும், அங்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறும் ஜெர்மனி கேட்டுக்கொண்டுள்ளது.

ஈரானில் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு ஜேர்மனியர்கள் ஆளாகாமல் தடுக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதிக்க பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் 30 நாள் செயல்முறையைத் தொடங்கிய ஐக்கிய நாடுகள் சபையின் பின்னணியில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.

அந்த நாடுகள் விடுத்த எழுத்துப்பூர்வ கோரிக்கையை பரிசீலிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஏற்கனவே ஒரு சிறப்புக் கூட்டத்தைத் தொடங்கியுள்ளது.

இந்தக் கூட்டம் வெளி தரப்பினருக்குத் திறந்திருக்காது.

ஈரானின் சர்ச்சைக்குரிய அணுசக்தித் திட்டம் காரணமாக இந்தத் தடைகளை மீண்டும் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானில் உள்ள மூன்று அணு மின் நிலையங்களை அமெரிக்கா குண்டுவீசித் தாக்கிய இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்தத் தடைகளை விதிக்கும் முடிவு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

நியாயமான மற்றும் சமநிலையான அணுசக்தி பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராக இருப்பதாக ஈரான் கூறியுள்ளது.

(Visited 11 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி