இலங்கை பொலிஸாரால் தேடப்பட்டு வந்த 6 ஆபத்தான நபர்கள் வெளிநாட்டில் கைது

இலங்கை பொலிஸாரால் தேடப்பட்டு வந்த 6 பேர் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையை விட்டு தப்பிச் சென்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளான கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சாலிந்த மற்றும் பாணந்துர நிலங்க உள்ளிட்ட ஐந்து சந்தேக நபர்களும் ஒரு பெண்ணும் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் உள்ள சிறப்பு பொலிஸ் குழு மற்றும் இந்தோனேசிய பொலிஸ் குழு நடத்திய கூட்டு நடவடிக்கையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனை பொலிஸ் இன்பெக்டர் ஜெனரல் பிரியந்த வீரசூரிய உறுதி செய்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை விரைவில் நாட்டிற்கு அழைத்து வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(Visited 1 times, 1 visits today)