இங்கிலாந்தில் உள்ள தீவு பகுதியில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்!

இங்கிலாந்தில் உள்ள வைட் தீவு பகுதியில் (Isle of Wight) ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று காலை 9 மணிக்குப் பிறகு ஷாங்க்லின் சாலை அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது, இது ஒரு பெரிய அவசர நடவடிக்கையைத் தூண்டியது.
அவசர சேவைகள் ஒருவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளன. கடலோர காவல்படை மற்றும் பொலிஸார் ஆகியோர் சம்பவ இடத்தில் உள்ளனர்.
ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானமைக்கான காரணம் தெரியவராத நிலையில் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
(Visited 1 times, 1 visits today)