தண்ணீர் குடிக்காதவர்களை பாதிக்கும் மன அழுத்தம் – புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்

தினசரி போதுமான அளவு தண்ணீர் குடிக்காதவர்கள், அதிக கார்டிசோல் (மன அழுத்த ஹார்மோன்) வெளிப்பாடுக்கு ஆளாகிறார்கள் என தெரியவந்துள்ளது.
லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
ஆய்வில், தினசரி 1.5 லிட்டருக்கும் குறைவாக தண்ணீர் குடித்தவர்களும், பரிந்துரைக்கப்பட்ட அளவு தண்ணீர் குடித்தவர்களும் (ஆண்களுக்கு 2.5 லிட்டர், பெண்களுக்கு 2 லிட்டர்) ஒப்பிடப்பட்டனர்.
இரு குழுக்களும் மன அழுத்த சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட போது, தண்ணீர் குறைவாக குடித்தவர்களில் அதிக கார்டிசோல் அளவு பதிவாகியது.
பேராசிரியர் நீல் வால்ஷ் கூறுகையில், “உடலின் முதன்மை மன அழுத்த ஹார்மோன் கார்டிசோல். அதன் அதிக வெளிப்பாடு இதய நோய், நீரிழிவு மற்றும் மனச்சோர்வு போன்ற நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்” என தெரிவித்தார்.
தினசரி மைக்ரோ மன அழுத்தங்களையும் (காலத்தாமதம், வேலை அழுத்தம் போன்றவை) சமாளிக்கவும், ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், நீர் உட்கொள்ளலை பேணுவது அவசியம் என ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.