ஆப்பிரிக்காவின் அளவு குறைந்துவிட்டது – சமபூமி வரைபடம் கோரும் ஆர்வலர்கள்

மெர்க்கட்டோர் வரைபடத்தில் ஆப்பிரிக்காவின் அளவு குறைவாகக் காணப்படுவதாக ஆர்வலர்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதனால் சம பூமி வரைபடத்தை பாடசாலைகளில் அறிமுகம் செய்யப்பட வேண்டும் என ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
உலக வரைபடங்களில் ஆப்பிரிக்கா மிகச் சிறியதாக காட்டப்படுவதால், அந்த கண்டத்தைச் சேர்ந்த பல ஆர்வலர்கள் அதற்கெதிராக குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக, பரவலாகப் பயன்படுத்தப்படும் மெர்க்கட்டோர் கணிப்பு வரைபடம், ஆப்பிரிக்காவின் உண்மையான பரப்பளவை தவறாக பிரதிபலிக்கிறது என அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அதற்குப் பதிலாக, சம பூமி கணிப்பு என்ற புதிய வகை வரைபடத்தில், அனைத்து கண்டங்களின் அளவும் பொருத்தமான முறையில் காணப்படுவதாக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்மூலம், ஆப்பிரிக்காவின் உண்மையான பரப்பளவு மற்றும் முக்கியத்துவம் மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் தெளிவாக விளங்கும் என்று அவர்கள் நம்புகின்றனர்.
சமீபத்தில், ஆப்பிரிக்க ஒன்றியம் இந்த சம பூமி வரைபடத்திற்கு அதிகாரபூர்வ ஒப்புதல் அளித்துள்ளது. பள்ளிக் கல்வியில் இது இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கையுடன் பல அமைப்புகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
ஆப்பிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டுவது மிக முக்கியமானது. இது ஆப்பிரிக்கர்களின் அடையாளம் மற்றும் பெருமைக்குரிய விடயம். மெர்க்கட்டோர் வரைபடம் ஆப்பிரிக்காவை குறைத்து காண்பிப்பதால், மக்கள் தவறான கருத்துக்களை உருவாக்குகிறார்கள் என ஓர் ஆர்வலர் குழுவின் நிறுவனர் கூறினார்.
தற்போதைய நிலையில், உலகின் பல்வேறு பள்ளிகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில் மெர்க்கட்டோர் வரைபடமே பயன்படுத்தப்படுகின்றது. ஆனால், இந்த நிலைமை எதிர்காலத்தில் மாற்றப்படும் என்பதை ஆர்வலர்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றனர்.