அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மத்தியில் உக்ரைன் மீது ரஷ்யா பாரிய தாக்குதல்

கடந்த சில வாரங்களில் மட்டும் ரஷ்யா உக்ரைன் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யா 574 ட்ரோன் தாக்குதல்களையும் 40 ஏவுகணை தாக்குதல்களையும் நடத்தியுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும், அந்த தாக்குதல்களில் ஒருவர் மட்டுமே கொல்லப்பட்டுள்ளார்.
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான மோதலை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தபோது இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்திக்கத் தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். ரஷ்யா 2022 இல் உக்ரைன் மீது படையெடுப்பைத் தொடங்கியது.
தற்போது உக்ரைனின் ஐந்தில் ஒரு பகுதியை ரஷ்யா கட்டுப்படுத்துவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.