சற்று முன்னர் CIDயில் இன்று ஆஜரான ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு முன் ஆஜராகி உள்ளார்.
வாக்குமூலம் பதிவு செய்ய ஆஜராகுமாறு திணைக்களம் அனுப்பிய அழைப்பாணைக்கு பதிலளிக்கும் விதமாக அவர் வருகைத்தந்துள்ளார்.
ஜனாதிபதியாக அவர் பணியாற்றிய காலப்பகுதியில் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் வாக்குமூலம் அளித்த பிறகு, கொழும்பின் உள்ள தனது அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தவும் அவர் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 2 times, 2 visits today)