கரீபியன் கடற்பகுதியில் நிலைக்கொண்டுள்ள புயல் – பல பகுதிகளுக்கும் மழைக்கு வாய்ப்பு!

வெப்பமண்டலத்தில் நிலைக்கொண்டுள்ள எரின் புயலானது அந்தப் பகுதியை நெருங்கும்போது, வடக்கு கரீபியனில் உள்ள மக்கள் பலத்த மழை மற்றும் ஆபத்தான தாக்கங்களை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆன்டிகுவா மற்றும் பார்புடா, அமெரிக்க பிரிட்டிஷ் மற்றும் விர்ஜின் தீவுகள் மற்றும் புவேர்ட்டோ ரிக்கோ உள்ளிட்ட தீவுகளின் வடக்கு-வடகிழக்கே நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று மியாமியில் உள்ள தேசிய சூறாவளி மையம் தெரிவித்துள்ளது.
குறித்த எரின் புயுலானது ஒரு சூறாவளியாக மாறி, சனிக்கிழமை பிற்பகுதியில் வகை 3 புயலாக வலுவடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த வார இறுதியில் வடக்கு லீவர்ட் தீவுகள், அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் மற்றும் புவேர்ட்டோ ரிக்கோவின் சில பகுதிகளில் காற்றானது வேமாக வீசக்கூடும் எனவும் முன்னறிவிக்கப்பட்டுள்ளது.