இமயமலைக்கு செல்லும் வழியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் – 50 பேர் மாயம்!

இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் இந்து யாத்ரீகர்கள் வசிக்கும் ஒரு கிராமத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 38 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இமயமலையில் உள்ள ஒரு பிரபலமான கோவிலுக்குச் செல்லும் பரபரப்பான யாத்திரைப் பாதையில் உள்ள கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள சோசிட்டி என்ற தொலைதூர கிராமத்தில் இந்த பேரழிவு நிகழ்ந்துள்ளது.
டஜன் கணக்கான யாத்ரீகர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர், ஆனால் குறைந்தது 50 பேர் காணாமல் போயிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
அத்துடன் மீட்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேக வெடிப்பால் வெள்ளம் ஏற்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், இது “பாரிய அளவில்” இருப்பதாகவும், மீட்புக் குழுக்கள் அந்த இடத்தை அடைவது கடினமாக இருப்பதாகவும் கூறினார்.
ஒரு சாலை அடித்துச் செல்லப்பட்டதாகவும், வானிலை ஹெலிகாப்டர்களுக்கு போதுமானதாக இல்லை என்றும் அவர் கூறினார்.