மேற்கத்திய நாடுகளின் தடைகள் – கடும் நெருக்கடியில் ரஷ்யா – பொருளாதார அழுத்தம் தீவிரம்

ரஷ்யாவின் வங்கித் துறையில் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேற்கத்திய நாடுகளின் தடைகள் காரணமாக, இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் பொருளாதார அழுத்தம் தீவிரமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளத.
ரஷ்யாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான VTB வங்கி, கடந்த ஆறு மாதங்களில் அதன் நிகர வட்டி வருமானத்தில் 49 சதவீத சரிவு ஏற்பட்டுள்ளதாக ப்ளூம்பெர்க் தகவல் வெளியிட்டுள்ளது.
இது 2025ஆம் ஆணடும் ஜூன் மாதம் வரையிலான காலத்தில் 146.8 பில்லியன் ரூபிள் சதவீத சரிவாகும்.
உக்ரைன் போருக்காகவும், ஆயுதத் தொழில் வளர்ச்சிக்காகவும் மாநிலம் நேரடியாக நிதியளிக்க வேண்டிய கட்டாயம், வங்கிகளின் நிலையை பெரிதும் பாதித்துள்ளது.
வங்கி நிர்வாகம் நிலைமை நிலைத்துள்ளது என்று தெரிவித்தாலும், மூத்த ஊழியர்கள் நிலைமை இன்னும் மோசமாக இருக்கக்கூடும் எனக் குறிப்பிடுகிறார்கள்.
இந்த நிதிச் சிக்கல்கள், ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் தொடரும் பொருளாதார அழுத்தத்துடனும், இந்தியா போன்ற நாடுகளுடன் ஏற்பட்ட வர்த்தக சிக்கல்களுடனும் தொடர்புடையவையாகும்.