உணவகத்தில் பணியாற்றும் 15 வயது சிறார்கள்

திருச்சி திண்டுகல் தேசிய நெடுஞ்சாலை இடையே உள்ள நடுப்பட்டி சுங்க சாவடி அருகே அண்ணம் சைவ அசைவ உணவகம் இயங்கி வருகிறது.
இந்த நிலையில் உணவகத்தில் முழுவதும் 15 வயதிற்குட்பட்ட சிறார்கள் உணவு பரிமாறுவதும் டேபில்களை சுத்தம் செய்வது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
18 வயதுக்குட்பட்ட சிறார்கள் படிப்பதை தவிர்த்து வேலைகளை செய்ய அரசு தடை விதித்துள்ள நிலையில் உணவகம் முழுவதும் சிறார்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.
இதுதொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் வாடிக்கையாளர்களுக்கு சிறார்கள் உணவுகளை கொண்டு வந்து பரிமாறி செல்லும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
(Visited 18 times, 1 visits today)